விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் 29ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் 29-ந் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.. திரைக்கு வந்து 16 நாட்களில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.