சென்னையில் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில், இன்று 47,000 நெருங்கியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதேபோல வெள்ளியின் விலையும், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம்  30 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.81,000-க்கும் விற்பனையானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.