கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே…

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிவேகமாக அதிகரிக்கிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் வார்டு ஒன்றிற்கு ஒரு குழு வீதம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 200 குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த மருத்துவக் குழு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்து மருத்துவமனை சிகிச்சை அவசியமா என்ற பரிந்துரையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படும் எனவும், அவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி வெளியே செல்கின்றனரா என்பதை இந்த குழு கண்காணிக்கும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.