அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை அம்பத்தூர் அருகே டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டயர்…

சென்னை அம்பத்தூர் அருகே டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் உள்ள கிடங்கில், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக, தீப்பற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.