முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பாடி பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர்.

ஒரு மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கருப்பு பூஞ்சையால் கணவர் பாதிப்பு கதறி அழும் மனைவி!

நட்பைப் போற்றும் ‘RRR’ படத்தின் பாடல்

Halley karthi

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவு : ஐ.பெரியசாமி

Ezhilarasan