மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதால் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அவரது குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலையில் மின் வயர் அறுந்து முகமது இஸ்மாயில் மீது விழுந்துள்ளது. இதில் அவரது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சாலையில் சென்ற நாய் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. அதன்பின் வந்த ஒரு டாட்டா ஏசி வாகனத்திலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த டாட்டா ஏசி ஓட்டுனர் உயிர் தப்பினார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து
இதுதொடர்பாக கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிகுமார் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.