சென்னை : செல்போனை திருடியதாக தலையில் கல்லைபோட்டு கொலை – 2 பேர் கைது

சென்னையில் செல்போன் திருடியதாக ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் கீழே புளியந்தோப்பைச் சேர்ந்த அப்பு…

சென்னையில் செல்போன் திருடியதாக ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் கீழே புளியந்தோப்பைச் சேர்ந்த அப்பு என்கின்ற நீக்ரோ அப்பு (வயது 24) என்பவர் தூங்கிகொண்டிருந்தார். அப்போது, மகேஷ் என்பவர் தனது நண்பரோடு சேர்ந்து அங்கு சென்றுள்ளார்.

 

பின்னர் தனது செல்போனை திருடியது தொடர்பாக அப்புவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு உச்சமடைந்ததும், அருகில் இருந்த கல்லை தூக்கிஅப்பு தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மகேசும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், படுகாயம் அடைந்த அப்புவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அப்பு உயிரிழந்தார்.

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தண்டையார்பேட்டையை சேர்ந்த மகேஷ் மற்றும் திருவொற்றியூர் காலடி பேட்டையை சேர்ந்த வைரமுத்து ஆகிய இருவரை தேடி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.