ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதனால் ரசிகர் மிகுந்த ஆர்வத்தில் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி அபரா வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி விட்டது. ஐ.சி.சி உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்தியா-பாக். அணிகள் விளையாடி வருகின்றன.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இன்று களம் இறங்குகிறது. இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரும் காத்திருப்பு பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், தீபக் சாஹரும் உள்ளனர்.
இதேபோல் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.