செங்கல்பட்டு அருகே, என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் உடலை கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் நேரில் பார்வையிட்டனர்.
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் ஆகியோர், செங்கல்பட்டு அருகே, மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்களை பிடிப்பதற்காக போலீசார் சென்றனர். அப்போது, போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்த முயன்றதால், அவர்கள் இருவரையும் போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர்.
இதையடுத்து, மொய்தீன், தினேஷ் ஆகியோரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இருவரின் உடலையும் கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன் மற்றும் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர்.








