முக்கியச் செய்திகள் தமிழகம்

மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

திருவாரூரில் அரசின் எந்த ஒரு உதவியும் கிடைக்காததால், தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பானை, மண் சட்டி, மண் அடுப்பு உள்ளிட்டவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக தயார் செய்து வருகின்றனர்.

இந்தப் பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் அவர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அரசு சலுகைகள் கிடைக்காத மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கெடுத்து உரிய நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் தெ.கல்லுப்பட்டி பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பானைகள் செய்யும் பணி சூடுபிடித்துள்ளது. ஒரு பானையின் விலை 30 முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தின் தொடக்கத்தில் இருந்தே நலிந்து கிடக்கும் பானை தொழிலுக்கு, தெம்பூட்டும் விதமாக, தாங்கள் தயாரிக்கும் பானைகளை தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் மண்பாண்ட் தொழிலாளர்கள், அரசு, ரேஷன் கடைகளில் வழங்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்புடன் கொள்முதல் செய்த பானைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மின் அளவீடை அறிந்து கொள்ள புதிய செயலி: முதலமைச்சர் அறிவுறுத்தல்

Gayathri Venkatesan

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!

Niruban Chakkaaravarthi

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

Jayapriya