அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி உட்பட 3 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சேகர். மற்றும் ராணி இவர்களது பேத்தி ஆகிய 3 பேரும் ஆலப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு வளைக்காப்பு நிகழ்ச்சிக்கு இரவு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் தங்கள் இரு சக்கர வாகனத்தில் காட்டுகூடலூரை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

மேல்மருவத்தூர்-வந்தவாசி சாலையில் வந்த போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் பெற்று சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.