” என் மனதை கவர்ந்த சென்னை “ – தென் இந்திய உணவை ருசித்த பின் அமெரிக்க தூதர் ட்வீட்..!

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தென் இந்திய உணவை ருசித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் “ என்னை கவர்ந்த சென்னை” தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உணவு என்பது வெறுமனே பசி தீர்க்கும்…

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தென் இந்திய உணவை ருசித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் “ என்னை கவர்ந்த சென்னை” தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உணவு என்பது வெறுமனே பசி தீர்க்கும் காரியம் மட்டுமல்ல. அது உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு உணவுப் பழக்கம் உண்டு. இப்பழக்கம் அந்தந்த பகுதியின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப அமைந்துள்ளது. தென் இந்திய உணவில் அரிசி பிரதான உணவு எனில் வட இந்தியாவில் கோதுமை பிரதான உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

உலகின் பல பகுதிகள் தங்கள் வாழ்வியலுக்கு உகந்த உணவுக் கலாச்சாரத்தை கொண்டுள்ளனர். இந்திய உணவான  பிரியாணியை வெளிநாட்டினர் விரும்பி உண்பது போல சீன உணவான நூடுல்ஸ் மற்றும் பீட்சாவை இந்தியர்களும் விரும்பி உண்டு வருகின்றனர். இந்தியா முழுக்க ஃபாஸ்புட் எனப்படும் வெளிநாட்டினரின் உணவுகள் தற்போது மக்களின் உணவுப் பழக்கங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

உணவு பழக்க வழக்கத்தைத் தாண்டி ஆரோக்கியத்திலும் முக்கிய இடத்தை வகிப்பதால் குறிப்பிட்ட மக்கள் எங்கெல்லாம் இடம்பெயர்கிறார்களோ அங்கேல்லாம் தங்களது உணவுக் கலாச்சாரத்தை பரப்புகின்றனர். அதன்படி அமெரிக்கா முதல் அரேபிய நாடுகள் வரை இந்திய உணவகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல அமெரிக்க, சீன, அரேபிய மற்றும் ஜப்பானிய உணவுகங்கள் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். அவருக்கு தென் இந்திய தாலி உணவு வாழை இலையில் பரிமாறப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் எரிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது..

“ வணக்கம் … தென் இந்தியாவின் தாலி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன்.  தென் இந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. என்னை சென்னை மிகவும் ஈர்த்துள்ளது..” என எரிக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.