கோபிசெட்டிபாளையம் அருகே 1998-99 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடை பெற்றது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம் அரசு
மேல்நிலை பள்ளியில் கடந்த 1998-99 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள்
மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் தற்போது வணிகர்களாக, பொறியாளராக, மருத்துவராக, தொழில் அதிபர்களாக இருந்து வருகின்றனர். மாணவிகள் ஆசிரியராக, செவிலியராக, கணினி பொறியியல் வல்லுனராக பணியாற்றி வருகின்றனர். பின்னர் 25 ஆண்டுகளுக்கு பின்பு மாணவர்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் சேரும் போது தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்த பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற
மூன்று மாணவிகளுக்கு தலா பத்தாயிரம் வழங்கினர். இதனை அடுத்து தங்களுக்கு கல்வி
அறிவை போதித்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை
போர்த்தி பாராட்டி மகிழ்ந்தனர். பின்னர் ஆசிரியர்களோடு மலரும் நினைவுகளாக
இருக்க வேண்டும் என்பதற்காக குழு படம் எடுத்துக் கொண்டனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







