முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாக்கர் சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாக்கர் சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “P.தங்கமணி தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த போது 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,85,72,019 சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 8/2021 u/s 13(2) r/w 13(1]{e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC & 12, 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 என்ற பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக 70 இடங்களில் (நாமக்கல் மாவட்டம்-33, சென்னை-14.ஈரோடு-8, சேலம்-4, கோயம்புத்தூர்-3, கரூர்-2, கிருஷ்ணகிரி-1, வேலூர்-1, திருப்பூர்-1, பெங்களுர்-2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் கடந்த 15.12.2021 சோதனை மேற்கொள்ளப்பட்டு கணக்கில் வராத பணம் மற்றும் சான்று பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று 20.12.2021-ம் தேததி இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 இடங்களில் (நாமக்கல் மாவட்டம் -12, ஈரோடு-3, சேலம்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சான்று பொருட்களான பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.