முக்கியச் செய்திகள் தமிழகம்

’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

திராவிட மாடல் என்ற பெயரை, நல்ல தமிழ் பெயராக மாற்றும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது, நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக புதுச்சேரியில், மாண்டஸ் புயலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நான் ஆளுநராக பொறுப்பேற்றது முதல், புதுச்சேரியில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறேன். அரசுக்கு துணையாக மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். நான் அரசியல்வாதியாக செயல்படவில்லை. ஆளுநராக மட்டுமே செயல்படுகிறேன்.

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக, நல்ல தமிழ் பெயரை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் வைக்க வேண்டும். திராவிட மாடல் என்பதில் மாடல் என்பது தமிழ் வார்த்தையா? மனக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் நினைவுகள், என் மனதில் நீங்காமல்
இருக்கிறது. அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, வேறு யானையை கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு!

Halley Karthik

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

EZHILARASAN D

குந்தவை, வந்தியத்தேவன் காதலை பற்றி எனக்கே தெரியாது! – ஆதித்த கரிகாலன்

G SaravanaKumar