முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 43 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1 கோடியே 20 லட்சம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் நடைபெறும் முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாதுகாப்பான பயணம் – நியூஸ் 7 தமிழ் பிரம்மாண்ட கள ஆய்வு

Arivazhagan Chinnasamy

பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்

Web Editor

அதிமுக ஆட்சியில் “சிஸ்டம்” சரியில்லை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

EZHILARASAN D