முக்கியச் செய்திகள் இந்தியா

‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’

பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகின்றது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் போடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகம், சீருடை விரைவில் வழங்கப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கான பேருந்து சேவை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆளுநர் என்ற பதவியும் வேந்தர் என்ற பதவியும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அண்மைச் செய்தி: ‘’யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு’

அப்போது, பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், காமராஜர் பல்கலைக் கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டது மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தவே இதனை அரசியலாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனத் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வைகையில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

G SaravanaKumar

நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட உள்ள தினகரன்

G SaravanaKumar

தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!

Web Editor