கரு முட்டை விவகாரம்-சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா , தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி , புரோக்கர் மாலதி மற்றும் ஆதார்…

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா , தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி , புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இன்று மருத்துவமனை இணை இயக்குநர் பிரம்ம குமாரி தலைமையில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள் மூலமாக விற்பனை செய்து வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல் துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்னை மருத்துவ இயக்குனரக இணை இயக்குனர் ( சட்டம்) விஸ்வநாதன் தலைமையில், மருத்துவ துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.