அதிமுகவில் சாதி ரீதியாகப் பதவி வழங்குவதில்லை: செல்லூர் ராஜு

யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், பதவி…

யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி தனக்குக் கழக அமைப்புச் செயலாளராகப் பதவி வழங்கியதாகவும், அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் எப்போதும் விசுவாசமாகச் செயல்படுவதாகக் கூறினார்.

மேலும், நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியதாகவும், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்கப் பாடுபடுவேன் எனத் தெரிவித்த அவர், அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாகத் தலைமை அலுவலகம் விளங்குவதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் நலமாக உள்ளார்’– காவேரி மருத்துவமனை’

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது எனவும், அதிமுகவிலிருந்து பிரிந்தவர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் எனவும் தெரிவித்த அவர், ஓபிஎஸ் எட்டிக்குப் போட்டியாகச் செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை எனத் தெரிவித்தார்.

யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஒ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதிமுகவில் சாதி ரீதியாகப் பதவி வழங்குவதில்லை, அதிமுகவின் சாதி இல்லை எனக் கூறினார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும், அவர் பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம், தொண்டர்களின் பலமே அதிமுக.எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.