மதுரை, ஈரோடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று காலை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல, வரும் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் நாமக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
அண்மைச் செய்தி: ‘வரலாறு படைத்த இந்திய அணி; பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து’
இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது, மதுரை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.