முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்ய அதிபருக்கு கடும் உடல்நிலை பாதிப்பு: உக்ரைன்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு கடும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஆட்சியில் இருந்து கவிழ்க்க சதி நடந்து வருவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஸ்கை நியூஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு உக்ரைன் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புதானோவ் அளித்த சிறப்பு நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

விளாதிமிர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதோடு வேறு சில பாதிப்புகளும் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ள கிரிலோ புதானோவ், அவரை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கான முயற்சிகளும் மறைமுகமாக அந்நாட்டில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மேற்கொள்ளும் தந்திரமான பிரச்சாரமாக இதை யாரும் கருதக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ள கிரிலோ புதானோவ், அதேநேரத்தில் ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு அத்தனை எளிதல்ல என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போர், வரும் ஆகஸ்ட்டில் முக்கிய திருப்பத்தை எதிர்கொள்ளும் என தனது கணிப்பை வெளியிட்டுள்ள உக்ரைன் உளவுத்துறை தலைவர், இந்த ஆண்டு இறுதிக்குள் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என கூறியுள்ளார்.

இதன் மூலம், தாங்கள் இழந்த டான்பாஸ், கிரிமியா ஆகிய பகுதிகளும் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கிரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே புதினின் உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தி நியூ லைன்ஸ் என்ற இதழ், புதின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை மட்டுமல்லது, உக்ரைனின் பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் அழித்தவர் புதின் என்றும் இந்த போருக்குக் காரணம் குழம்பிப் போன அவரது மூளைதான் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையில் புதினுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரு குழு தெரிவித்ததாக தி நியூ லைன்ஸ் தெரிவித்தது.

Advertisement:
SHARE

Related posts

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவுக்கு மீண்டும் வாய்ப்பு?

Ezhilarasan

மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

Jeba Arul Robinson

10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் அறிவிப்பு இல்லாதது சந்தேகம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை!

Halley Karthik