அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தணிந்து மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.
நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.







