வரும் 14 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் வரும் 14 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும், அது படிப்படியாக புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் என்றும் புயல் காரணமாக கேரளா, லட்சத் தீவு பகுதிகளில், கனமழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
தென் தமிழக மாவட்டங்களில், வரும் 14 ஆம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







