முழு ஊரடங்கை ஒட்டி தமிழகம் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்த்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு ஊரடங்கு முன்பே அமலில் இருந்தது. நேற்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி- தமிழகம் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவச் சேவைகளுக்கு மட்டுமே எல்லைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.







