மாணவ, மாணவியர்களுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருவதால், மாணவ, மாணவியர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி
மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய் வட்டாட்சியர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.







