தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது..
” கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் மீது ஆசிட்
வீச்சு, கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. நீதிமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை
சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் காவல்
துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எந்த குற்றங்களையும் தடுப்பதில்லை .
கோவை மாவட்ட மக்களின் நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றில் 90 சதவீதம் கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. திமுக அரசும் மாவட்ட நிர்வாகமும் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. அதேபோன்று
பில்லூருக்கு வரகூடிய தண்ணீரை அணை கட்டுவதாக தெரிகிறது, அதையும் தடுக்க
வேண்டும்.
கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேகமாக முடிக்கவில்லை. எந்த சாலையை எப்போது தோண்டுகிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை. கொப்பரை தேங்காய் விலை உயர்த்தபட வேண்டும். தென்னை விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் பெய்த மழையால் கோவை மாவட்டத்தில் எட்டு லட்சம்
வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. மேட்டுப்பாளையம், சூலூர் தொகுதி
அதிகமாக பாதிக்கபட்டுள்ளது. அதற்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். கோவை மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வழங்குவதில் குளறுபடிகள் சரி செய்து நாட்களை குறைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும்.
எந்த திரைப்படமாக இருந்தாலும் எந்த மத்தை சார்ந்தவர்களையும் புண்படுத்தக் கூடாது. நான் இன்னும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை.
விஸ்வரூபம் படம் வந்த போது இஸ்லாமியர் மனம் புன்படும்படியாக இருந்த காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடும்படி முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதுபோல கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்” எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.







