‘அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது’

அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், ஜூம், டெலிகிரம், கூகுள் மீட் ஆகிய செயலிகள்…

அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப், ஜூம், டெலிகிரம், கூகுள் மீட் ஆகிய செயலிகள் மூலம் அரசின் ஆவணங்களை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது உண்மையா என்றும், அப்படியென்றால் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் எனவும் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், வாட்ஸ் அப், ஜூம், டெலிகிரம், கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகள் மூலம் அரசு ஆவணங்களை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, செய்திகளை தேசிய தகவல் மைய செயலி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேசமயம் ரகசிய ஆவணங்களை தேசிய தகவல் மைய செயலி மூலம் கூட பகிர வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேவேளையில் பாதுகாப்பு நடவடிகைக்காக இதுபோன்ற நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் காலத்திற்கு ஏற்றார் போல் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களை குறிப்பிட்ட செயலிகள் மூலம் அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முக்கியதுவம் வாய்ந்த தகவல்களை, செய்திகளை தேசிய தகவல் மையம் (NIC) செயலி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் பகிருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் ரகசிய ஆவணங்களை குறிப்பிட்ட NIC தளத்தின் மூலமும் கூட பகிரவேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.