முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

திரையரங்குகளை திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி

திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டன. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்குறியோடு நகர்ந்த நாட் களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்து கொள்ள லாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக் கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம். திரையரங்கு உரிமை யாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஓர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகர்!

Jeba Arul Robinson

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை

Gayathri Venkatesan

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

Ezhilarasan