முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்ட் சென்றார் பிரதமர் மோடி: கேதார்நாத்தில் சாமி தரிசனம்

பிரதமர் மோடி ,உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு ஆதிசங்கரர் சிலையை அவர் திறந்து வைக்க இருக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்குச் சென்றார்.

கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.  அவர், 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை அங்கு திறந்து வைக்கிறார். 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த சிலை சேதமடைந்தது. இப்போது அந்த சிலை புனரமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை பார்வையிடு கிறார். பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங் களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர், ராணுவ வீரர்களுடன் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

Advertisement:
SHARE

Related posts

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

Jeba Arul Robinson

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

Halley karthi

கட்சி தலைமை சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: எடியூரப்பா

Halley karthi