தாம்பரம் அருகே பேருந்தில் அடிப்பட்ட நாயினை பலரும் கடந்து சென்ற நிலையில், மனிதாபிமானத்தோடு செயல்பட்ட சுமோட்டோ ஊழியர் நாயினை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் காமராஜபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற நாய் மீது அரசு மாநகர பேருந்து மோதியது. இதில் காயமடைந்த நாய் வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலையில் வாகன ஓட்டிகள் பலரும் கடந்து சென்றனர்.
அப்போது அவ்வழியாக வந்ந சுமேட்டோ ஊழியர் ஒருவர் சாலையின் கிடந்த நாயை அப்புறப்படுத்தினார். இதையடுத்து பெண் ஒருவர் காயமடைந்த நாயின் உயிரைக் காப்பாற்ற கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி வாகன ஓட்டிகளிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் செயலால் அடிப்பட்ட நாய் உயிர் பிழைத்தது. இதனை கண்ட பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு நாயின் உயிரை காப்பாற்ற முயற்ச்சியில் ஈடுபட்ட இருவரையும் வெகுவாக பாராட்டினர்.







