அம்மா சிமெண்ட் விலை உயர்வு!

தமிழகத்தில் அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.26 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடுத்தர, ஏழை மக்களும் பயன் பெறும் வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அம்மா சிமெண்ட் விற்பனை தொடங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக…

தமிழகத்தில் அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.26 உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடுத்தர, ஏழை மக்களும் பயன் பெறும் வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அம்மா சிமெண்ட் விற்பனை தொடங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.190 விற்கப்பட்டது.

இந்நிலையில், சிமெண்ட் விலையை ரூ.190 இருந்து ரூ.236 ஆக உயர்த்த வேண்டும் என தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ரூ.46 உயர்த்தக் கோரிய நிலையில் ரூ.26 மட்டுமே தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.190க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை தற்போது ரூ.216 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அம்மா சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தோருக்கு பழைய விலையிலேயே சிமெண்ட் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply