முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்

பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு பிறகுதான் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், “நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் இக்கட்டான இந்த சூழலில் மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது. ஆகையால் அவர்களை கட்டாயம் தேர்வு எழுதச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

“தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஆனாலும் கூட அந்த மாணவரின் பெற்றோர்கள் தேர்வு நடத்தும் அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி விடுவார்கள் அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.” எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு தரப்பின் வாதத்தை கேட்ட பிறகு நீதிபதிகள் தெரிவித்ததாவது, “13 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே, சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே அதில் தலையிட விரும்பவில்லை.” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து இது தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்

Ezhilarasan

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

Saravana Kumar

சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

Hamsa