தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைப்பு

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்டுமானத்துறையைப் பொருத்தவரை சிமெண்ட், கம்பி ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள்.…

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கட்டுமானத்துறையைப் பொருத்தவரை சிமெண்ட், கம்பி ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள். இதனால் முதல்கட்டமாக இதன் உற்பத்தியாளர்களைச் சந்தித்து விலை குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூ.500-க்கு சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் கட்டுமான பணியாளர்கள் பெருதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் சிமெண்ட் விலை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் சிமெண்ட் விலை குறைப்பது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிமெண்ட் விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த விலை குறைப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.ஸ்ரீநிவாசன் வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.