ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ்; இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவு!

ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன்…

ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால், ஜாதி – மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், சான்றிதழ் வழங்கப்படாததால், மகனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அண்மைச் செய்தி: ‘பெண்ணிடம் பெற்ற பணத்தைத் திரும்ப அளிக்காத புகார்; அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!’

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தாரர் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.