“நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில். ஈடுபட்டனர் அவர்களுக்க ஆதரவாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் CJP, SFI, DYFI உள்ளிட்ட அமைப்பை சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராடிய மாணவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டது.

இதனிடையே தேர்வு குளறுபடிகளுக்கு பொருப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனையடுத்து டெல்லியில் போராடிய மாண்வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கலிவித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “ தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.