10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி

தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ஆம் தேதி, முருகன என்பவர்,…

தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ஆம் தேதி, முருகன என்பவர், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக விராலிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதனை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி உறுதி செய்த நிலையில், குற்றவாளி முருகன் தண்டனையை ரத்து செய்யகோரி உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள், அது குறித்த மருத்துவ அறிக்கைகள் இருக்கும்போது, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில்,  டி.என்.ஏ என்ற மரபணு சோதனையை மட்டுமே தங்களுக்கான ஆதரமாக கொண்டு, குற்றவாளிகள் தப்ப முடியாது என தெரிவித்தனர். மேலும், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி முருகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை, உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.