பந்தை எறிந்து பங்களாதேஷ் வீரருக்கு காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாலர் ஷாகின் ஷா அப்ரிதி, மன்னிப்புக் கேட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மூன்றாவது ஓவரில், ஷாகின் ஷா பந்துவீச்சில் பங்களாதேஷ் வீரர் அபிஃப் ஹூசைன் (Afif Hossain ), சிக்சர் விளாசினார்.
இதனால் ஆத்திரமடைந்தார் ஷாகின் ஷா. அந்த பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வந்த பந்தை எடுத்த ஷாகின் ஷா, வேண்டுமென்றே அபிஃப் ஹூசைன் மீது வேகமாக எறிந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், அந்த இடத்திலேயே கீழே சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதித்தனர்.
Shaheen Shah Afridi went up to Afif Hossain post-match 👏👏 #SpiritofCricket pic.twitter.com/F1dO6F8gn0
— Pakistan Cricket (@TheRealPCB) November 20, 2021
இந்நிலையில், வேண்டும் என்றே பந்தை எறிந்து காயம் ஏற்படுத்திய ஷாகின் ஷா அப்ரிதிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து, 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு ஷாகின் ஹா, அபிஃப் ஹூசைனிடம் மன்னிப்புக் கேட்டார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.








