ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; நீதிமன்றத்தில் அரசு கூடுதல் ஆவணம் தாக்கல்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான பண மொசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணம் தாக்கல் செய்துள்ளது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான பண மொசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணம் தாக்கல் செய்துள்ளது

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த ரிட் மனு ஆகியவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

அதில், ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் தொடந்து வந்து கொண்டிருக்கும் மோசடி புகார்கள், காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணை, முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அவர் தலைமறைவாக இருந்தது மற்றும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க எட்டு தனிப்படை அமைக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.

அதேபோல ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது உட்பட ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடி விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள எடுக்க அனைத்து முகாந்திரமும் இருப்பதால் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த சலுகையும் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.