முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கரும்புகள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும், கரும்புகள் போதிய அளவில் விற்பனை ஆகவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய் வரை விற்பனையான நிலையில், இந்தாண்டு 200 ரூபாய்க்கே விற்பனை ஆவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சள் கொத்து 20 ரூபாய்க்கும் சாமந்தி பூ ஒரு கிலோ 80 முதல் 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்னம் தோரணம் 150 ரூபாய்க்கும், அருகம் புல்கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Advertisement:
SHARE

Related posts

“நிலுவையில் உள்ள மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” – அமைச்சர்

Halley Karthik

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Vandhana

புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகை

Gayathri Venkatesan