அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த கீதாவிற்கு அபராதம் விதித்து வழக்கினை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சுயேட்சை வேட்பாளர் கீதா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவினை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தது.







