கேன்ஸ் திரைப்பட விழாவில் வினோத உடையில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் வினோதமான உடையை அணிந்து வந்த ஐஸ்வர்யா ராயை இணையவாசிகள் மீம்ஸ் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில்…

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் வினோதமான உடையை அணிந்து வந்த ஐஸ்வர்யா ராயை இணையவாசிகள் மீம்ஸ் மூலம் விமர்சித்து வருகின்றனர்.

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.

https://twitter.com/cinerasik/status/1659243341391724562?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659243341391724562%7Ctwgr%5Eadaa36f81df595e52451014ec2dd6e45e94aaff4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Faishwarya-rais-cannes-red-carpet-look-sparks-meme-fest-on-twitter-101684477677711.html

இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், சிவப்பு கம்பள வரவேற்பின்போது கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்தார். இது அங்கிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேநேரம் இணையவாசிகளின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. மீம்ஸ்களின் மூலமும், கருத்துகளின் மூலமும் ஐஸ்வர்யா ராயின் உடையை விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.