உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளை! கிராம மக்கள் அவதி!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தளி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூலையால் , பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக நகர துணை செயலாளர் அய்யர்பாண்டி என்பவரால் ,…

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தளி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூலையால் , பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக நகர துணை செயலாளர் அய்யர்பாண்டி என்பவரால் , அனுமதியின்றி கிராமத்தின் நடுவே செங்கல் சூளை அமைத்து சூளைகளுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து தீவைத்து எரிக்கப் படுவதால் , சூளையிலிருந்து வெளியேரும் நச்சுப்புகை‌ காரணமாக
கிராமமக்களுக்கு மூச்சுத்திணறல் , சுவாசக் கோளாறு , இருமல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் , இது குறித்து புகாரளித்தும் ஆளுங்கட்சியினர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை‌ எனவும் புகார் எழுந்துள்ளது.

காற்று மாசை உண்டாக்கும் செங்கல் சூளை உரிய அனுமதியின்றியும் , அரசின் வழிமுறைகளை பின்பற்றாமலும் ஆளும் கட்சி பின்புலத்துடன் செயல்பட்டுவருகிறது.

இப்பிரச்சினையில் உடனடியாக மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் போராட்டம்
நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

—சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.