முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று நான்கு மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார்களை பரிசாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

மகாராஜன் – திருநெல்வேலி, தர்மராஜ் -கன்னியாகுமரி, சிவசுப்பிரமணியம் -ஈரோடு, நந்தக்குமார் -கோவை என நான்கு மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை,“மத்திய இணையமைச்சர் முருகன் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். கண்டிப்பாக சட்டமன்றத்தில் நாங்கள் வெற்றி பெற்று, வெற்றி பெற்ற நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவோம் என்று கூறியபடி தற்பொழுது கார் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த கார் பரிசானது ஒரு அங்கீகாரம்தான்.” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், “தமிழகத்தில் தாமரை மலர முதல் காரணம் கலைஞர்தான். எங்கே பிஜேபி எங்கே தாமரை என்று கேள்வி கேட்டார் அவர். தற்பொழுது எல்லா இடத்திலும் தாமரை மலர்ந்துள்ளது.” என்று கூறினார். மேலும்,

“தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்குகின்றோம் என கூறியவர்கள் 3 மாதம் ஆகியும் தரவில்லை. இதுபோல சொன்ன சொல்லை காப்பாற்றாத கட்சி பாஜக கிடையாது. ஏற்கனவே கூறியது போல வெற்றி பெறச் செய்த மாவட்ட தலைவர்களுக்கு கார்களை இன்று வழங்குகின்றோம். இது உழைப்பின் வெகுமதி.” என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்து

Gayathri Venkatesan

சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

Ezhilarasan