காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பழனிசாமி – தேவகுமாரி தம்பதியின்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பழனிசாமி – தேவகுமாரி தம்பதியின் மகன் 19-வயதான ராஜகணபதி, கொட்டாம்பட்டி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் ராஜகணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டரை மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.