முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் கோர விபத்து- 5 பேர் பலி

சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளனர். இரவு 12 மணியளவில் தியாகராயநகரில் இருந்து, வண்டலூர் வரை சென்று வருவதற்காக காரில் புறப்பட்டுள்ளனர். பெருங்களத்தூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அடையாள தெரியாத வாகனம் கார் மீது மோதியுள்ளது.

இதில், நிலை தடுமாறிய கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!

Nandhakumar

நடிகை மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Gayathri Venkatesan

“தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி

Jeba Arul Robinson