ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள “தலைவி” திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை, ’தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, கருணாநிதியாக நாசர், ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, சசிகலாவாக பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக் கிறார். விஷ்ணுவர்தன் இந்துரி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.
இதற்கிடையே இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.








