இரத்தத்தில் உள்ள குறைபாட்டினால் உடலில் காயம் ஏற்படும் இடத்தில் இரத்தம் உறையாத நிலை ஏற்படுகிறது. இதனையே ஹீமோபிலியா என்று சொல்கின்றனர். இந்த நோய் உள்ள நபருக்கு, லேசான காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் வெளியேறும். இது பல சமயங்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாகி, உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,‘ஈட்டி படத்தில் நாயகன் அதேவாவிற்கு இந்த குறைபாடு’ இருப்பதைக் காட்டிருப்பார்கள். அப்போது, நாம் இப்படியெல்லாம் ஒரு நோய் இருக்குமா என நினைத்திருப்போம், ஆனால் இந்த நோய் உன்மை தான். ஹீமோபிலியா நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ஆம் தேதி உலக ஹீமோபிலிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஒரு வித மரபணு குறைபாடு எனக் கூறுகிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன், நிர்மலா. மேலும், ஹீமோபிலியா ஒரு குறைபாடே தவிர, இது நோய் அல்ல எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக இரத்தத்தில் 13 ஃபாக்ட்டர்கள் உள்ளது இதில் f8 மற்றும் f9 எனும் ஃபாக்ட்டர்களின் குறைபாட்டினால் இரத்தம் உறையும் தன்மையை உடல் இழந்து விடுகிறது. இந்த குறைபாட்டிற்குக் காரணியான மரபணு x chromosome-ல் உள்ளது. இந்த குறைபாடு ஆண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அண்மை செய்தி: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?
மனித DNA-வில் பெண்களுக்கு இரண்டு x chromosome-களும், ஆண்களுக்கு ஒரு x chromosome-உம் ஒரு y chromosome-உம் இருக்கும். இந்த குறைபாடு உள்ள ஒரு தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு இந்த குறைபாடு பாதிப்பை ஏற்படுத்தும், பெண் குழந்தை பிறந்தால், ஹீமோபிலியாவிற்க்கு காரணமான மரபணு செல்களில் இருக்கும். ஆனால், பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பெண் மரபணு கடத்தியாக மட்டும் செயல்படுவார். ஏனெனில் தந்தையிடம் இருந்து வரும் x chromosome-ல் இந்த குறைபாடு இருந்தாலும் தாயிடம் இருந்து வரும் x chromosome தான் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறுகிறார் மருத்துவர் நிர்மலா.
மேலும், ஹீமோபிலியா மரபணு மாற்றத்தால் ஏற்படுவதால் இதனை ஏற்படாமல் தடுக்க இயலாது. ஆனால், இந்த குறைபாடு உள்ளவர்கள் f8 மற்றும் f9 எனும் ஃபாக்ட்டர்களை மருந்தாக எடுத்துக்கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும், ஹீமோபிலியா உள்ளவர்கள் காயம் ஏற்படாதவாறு கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
- எழுத்து: சோனியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.