முக்கியச் செய்திகள் இந்தியா

‘ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து’ – உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர்கேரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் பேரணியின்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதி 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அசிஸ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆசிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

மேலும், லக்கிம்பூர் கேரி வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தலைமை நீதிபதி, ஒரு வாரத்திற்குள் ஆசிஸ் மிஸ்ரா சரணடைய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தான்?

Jeni

பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்

Arivazhagan Chinnasamy

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்

EZHILARASAN D