தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின்தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின், புதிய விலை கொள்கை அமலாக்கத்தின் மூலம் பொதுமக்கள் சிறுவர்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு சேனல்களின் விலை ஏற்றியதை கண்டித்து தமிழகம் முழுவதும் கேபிள் டிவி சங்க ஆபரேட்டர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சங்கத்தின் தலைவர் அகிலன் மற்றும் பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி பேசியதாவது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
“கேபிள் கட்டண உயர்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம். அதில் குறிப்பிட்டபடி விலையை கட்டுப்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் அந்தந்த சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தும் போராட்டமானது தொடரும் ” என தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் செலுத்தும் கேபிள் கட்டணம் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே இதனை கண்டித்து 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டண சேனல்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது
தமிழகம் முழுவதும் இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
–எம்.ஸ்ரீமரகதம்