மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நியூஸ் 7 தமிழின் ”கல்வி கண்காட்சி”

நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரையில் மாபெரும் கல்வி கண்காட்சி பிரம்மாண்டமாக இன்று தொடங்கியது. பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய…

நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரையில் மாபெரும் கல்வி கண்காட்சி பிரம்மாண்டமாக இன்று தொடங்கியது.

பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

எனவே நியூஸ்7 தமிழ் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டும் மாபெரும் கல்வி கண்காட்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த கண்காட்சி இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் டைபெறுகிறது.
கல்விக் கண்காட்சியை காண வருகை தரும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என  நியூஸ் 7 தமிழ் அறிவித்துள்ளது.

இந்த கல்வி கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில் 50க்கும் மேற்பட்ட பிரபல கல்லூரிகளின் ஸ்டால்கள், வங்கியில் கல்வி கடன் பெற ஆலோசனை, +2 தேர்வு முடிவதற்கு முன்பே கல்வி உதவிக்கு பதிவு செய்வது, +2 தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நிச்சய கல்வி உதவித் தொகை,  மேற்படிப்பு குறித்து தன்னம்பிக்கை பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் இந்த கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர் கல்வி குறித்து வழிகாட்டுவதற்காக கல்வி ஆலோசகர்களின் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று உயர் கல்வி ஆலோசகர் கலைமணி கருணாநிதி மற்றும் கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் மாணவர்களிடையே உயர் கல்வி குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.